"அவர் தம் வாலிபத்தை அடைந்ததும், அவருக்கு நாம் ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம். இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் நற்கூலி வழங்குகிறோம்."(அல் குர் ஆன் 12:22)


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்

டிஎன்டிஜே மாணவரணி சார்பாக நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்...

இன்ஷா அல்லாஹ்... டிஎன்டிஜே மாணவரணி சார்பாக நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளின் விபரம் அட்டவணையாக கீழே தரப்பட்டுள்ளது. ....

 

தெரிந்து கொள்ள தொடருங்கள்...


Update Date: 16-05-2014 மேலும் படிக்க...
இன்னும் 7 நாட்களே உள்ளன...

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ நேரடியாக இரண்டாம் வருடம் சேருவதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வழங்குவதற்கு கடைசி நாள் மே 23, இன்னும் 7 நாட்களே உள்ளன. தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, அல்லது 10 ஆம் வகுப்புக்கு பிறகு குறைந்த பட்சம் இரண்டு வருடம் படிக்கும் ITI படிப்பு. அனைத்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் விண்ணப்பத்தை நேரடியாக பெற்று உரிய கல்லூரியின் முதல்வரிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தரலாம்...


Update Date: 16-05-2014 மேலும் படிக்க...
மாநில மாணவரணிக்கான புதிய நிர்வாகம்

மாநில மாணவரணியின் ஒருங்கிணைப்புக்கூட்டம் கடந்த மே 3 ஆம் தேதி மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநில துணைப்பொதுச்செயலாளர் மும்மத் யூசுஃப் அவர்களும் மாநில மாணவரணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதில் மாநில மாணவரணிக்கான புதிய நிர்வாகம் நியமிக்கப்பட்டது.


Update Date: 20-05-2014 மேலும் படிக்க...
புதிய தலைமுறையின் கல்வி உதவி‏ ..

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று பொருளாதார காரணங்களால் படிப்பை தொடர முடியாத ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில் புதியதலைமுறை இதழ் குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இலவச கல்வி எனும் உதவி திட்டத்தை வெளியிட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பை உங்கள் பார்வைக்கு தருகிறோம். விரும்பும் தகுதியுடைய மாணவர்கள் நீங்கள் சேரப்போகும் கல்வி நிறுவனங்கள் குறித்தும் இந்த உதவி திட்டம் குறித்தும் முழுமையாக விசாரித்து கொண்டு பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். இன்னும் பொருளாதாரத்தில் பின்தங்கிய, தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு புதிய தலைமுறை வழங்கும் இலவச உயர் கல்வித் திட்டம்...


Update Date: 12-05-2014 மேலும் படிக்க...
கால்நடை மருத்துவ பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள்


கால்நடை மருத்துவ பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் 12-5-2014 முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னை , நாமக்கல் ,ஒரத்தநாடு, நெல்லை மற்றும் ஓசூரில் உள்ள கல்வி மையங்களில் பயில்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. கால்நடை மருத்துவ படிப்புக்கான 280 இடங்களுக்கும் , 20 உணவு பதப்படுத்தல் மற்றும் 20 கோழி உற்பத்தி தொழில் நுட்ப படிப்புக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.


Update Date: 12-05-2014 மேலும் படிக்க...
சட்ட படிப்புகளுக்கு 12ம் தேதி முதல் விண்ணப்பம்‏...

சென்னை: அம்பேத்கர் சட்ட பல்கலை மற்றும் சட்டக் கல்லூரிகளில் 2014-15ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்காக ஐந்தாண்டு படிப்பிற்கு வரும் 12ம் தேதியும், மூன்றாண்டு பட்டப் படிப்பிற்கு 26ம் தேதியும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையின் கீழ் தமிழத்தில் ஏழு சட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், சட்ட பல்கலையில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு, மூன்றாண்டு பட்டப்படிப்பு மற்றும் பி.காம்., பி.எல். படிப்புகளும் நடத்தப்படுகின்றன. இப்படிப்புகளுக்கான 2014-15ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு..


Update Date: 09-05-2014 மேலும் படிக்க...
Pages:(249)  First|Previous 1  2  [3] 4  5  6   Next|Last
நிகழ்ச்சிகள்
TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in