TNTJ Student wing

 "அவர் தம் வாலிபத்தை அடைந்ததும், அவருக்கு நாம் ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம். இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் நற்கூலி வழங்குகிறோம்."(அல் குர் ஆன் 12:22)


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
கூக்குளை(Google) புறக்கணிப்போம்...
Click image to enlarge

எந்த தொழிலிலும் ஏகபோகம் (monopoly) என்பது வரவேற்கத்தக்கதல்ல. தங்களுடைய பொருட்களும் சேவைகளும் இல்லாமல் மக்களால் இருக்க முடியாது எனும்  காரணத்தினால் தான் கொடுப்பதை வாங்கினால் வாங்கு இல்லையென்றால் ஒழி எனும் நிலையை ஒருநிறுவனம் எடுத்தால் சேவையை பெறும் (consumers) பொதுமக்களால் எதுவும் செய்ய முடியாத ஒரு நிலை உருவாகும். இதற்கு சமீபத்திய உதாரணம் Google. 

 

இன்றைய உலகின் இளைய தலைமுறையும், தகவல்களை தேடிஅலைபவர்களும் Google இல்லாத ஒரு தினசரி வாழ்க்கையை நினைத்துகூட பார்க்கமுடியாத அளவிற்கு Google எனும் தேடுதளம் (Search Engine) இண்டெர்நெட் உலகத்தை முற்றிலும் வியாபித்திருக்கிறது.

 

இத்தளத்தினால் சென்ற காலங்களில் நன்மை இருந்தபோதும் இத்தளத்திற்கும் இந்நிறுவத்தினால் வழங்கப்படும் சேவைகளுக்கும் ஒரு மாற்றை சிந்திக்கவேண்டிய நேரம் தற்போது உருவாகியுள்ளது. சமீபத்தில் நபிகள்நாயகம்(ஸல்) அவர்களை தவறாக சித்தரித்து எடுக்கப்பட்ட படத்தையும் அதை Google நிறுவனத்தின் YouTube எனும் தளத்தின் மூலமாக சில விஷமிகள் பரப்பியதையும் தாங்கள்அறிவீர்கள்.

 

இந்திய அரசாங்கத்திற்கும் அதனுடைய சட்டங்களுக்கும் கட்டுப்பட்டு அந்த படத்தை தற்போது Google இந்தியாவில் நீக்கியுள்ளது. ஆனால் அதை உடனடியாக நீக்கவைக்க மிகப்பெரிய அழுத்தத்தை இந்திய அரசாங்கத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும்,  பிற இஸ்லாமிய அமைப்புகள் கொடுக்க வேண்டி இருந்தது

 

கருத்துசுதந்திரம் எனும் கண்ணோட்டத்தில் கண்டகழிவுகளை இண்டெர்நெட்டில் உலவவிடுவதை தடுக்க இந்திய அரசாங்கம் முழுமையான நடைமுறைகளை இத்தளங்களுக்கு தந்துள்ளதா? எனும் கேள்வியும் அதை இந்நிறுவனங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் எனும் கேள்வியும் இத்தருணத்தில் நமக்கு தோன்றுகிறது.

 

பிறமத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான வீடியோக்களை வெளியிடக்கூடாது எனும் அவர்களுடைய தளவிதிகளின் படியே வெளியிட தகுதியில்லாத இந்த வீடியோவை வெளியிட்டது மட்டும் இல்லாமல் அதை இன்று வரை பல நாடுகளில் You Tube  நீக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது. 

 

தங்களுக்கு நிகராக யாரும் இல்லை எனும் எண்ணம்தான் இவர்களின் இந்த மெத்தனத்திற்கு காரணமாக இருக்குமேயானால் அவர்களின் இந்த எண்ணத்தை மாற்ற நடுநிலையாளர்களும், இஸ்லாமியர்களும் வேறு நிறுவனங்களின் பக்கம் தங்களின் பார்வையை திருப்ப வேண்டிய சரியான தருணம் இதுதான்.

 

Google ன் ஏகாதிபத்தியத்தை குறைக்கவும் மக்களின் மனநிலையை இவர்களுக்கு உணர்த்தவும் Google நிறுவனத்தால் வழங்கப்படும் பல்வேறு அப்ளிகேஷன்களுக்கு மாற்று அப்ளிகேஷன்களை தங்கள் பார்வைக்கு தந்துள்ளோம். ஒற்றை நிறுவனத்தின் ஏகபோகத்தை உடைத்தெறியவும், இக்கட்டான சூழ்நிலைகளில் கையைப் பிசைந்து கொண்டு நிற்பதை தடுக்கவும்,கீழே கொடுக்கப்பட்ட மென்பொருள்களையும் அப்ளிகேஷன்களையும் பயன்படுத்துவது ஒரு பெரிய மாற்றத்திற்கான சிறு விதையாக அமையும் என்று உறுதியாக நம்புகிறோம்.

 

வழங்கப்படும்சேவை

சேவையின்பெயர்

மாற்றுநிறுவனம்

லிங்க்

இண்டெர்நெட்புரவுசர்

Google Chrome

 Mozilla Firefox

http://www.mozilla.org/en-US/products/download.html?product=firefox-15.0.1&os=win&lang=en-US

சர்ச்எஞ்சின்  

www.Google.com

Microsoft Bing

www.bing.com

ஈமெயில்

Gmail

Windows Hotmail

http://www.hotmail.com/

வீடியோஷாரிங்

You Tube

Vimeo/ Metacafe  

http://www.vimeo.com/www.metacafe.com

போட்டாஷாரிங்

Picasa

Flickr

http://www.flickr.com/

காலண்டர்

Google Calendar

Zoho Calendar 

https://www.zoho.com/calendar/?serviceurl=/mycalendar

 

குறிப்பு :  தங்களுடைய FaceBook அக்கவுண்ட் Gmail ID யினால் உருவாக்கப்பட்டு இருந்தால் அதை Hotmail mail Id kku மாற்றி கொள்ளவும்.

 

உத்தம நபியின் கண்ணியத்தை குளைக்க முயல்பவர்களுக்கும் அதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு தருபவர்களுக்கும் நம்முடைய எதிர்ப்பையும், கோபத்தையும் புரியவைக்க அவர்களின் பொருளாதாரத்தை அசைத்துபார்க்கும் இம்முயற்சிக்கு தங்களின்ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

உங்கள் சேவையை மாற்றிய பிறகு கீழ்உள்ள இந்தலிங்கில் வோட் செய்யவும் www.jesusinvites.com

 

எல்லாம் வல்ல இறைவன் இந்த முயற்சிக்கான உரிய பலனை தந்தருள்வானாக!

 

- நி. அல்அமீன்

மாணவர்அணி


TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in