தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோவை மாவட்டம், ஆசாத் நகர் கிளை மாணவர் அணியின் சார்பாக 09-12-2012 அன்று,10, +2 ஆம்வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என்ற "சாதித்துக் காட்டுவோம்" நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாநில மாணவர் அணி செயலாளர் அல் அமீன் அவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி?" என்ற .தலைப்பிலும், மாநில மாணவர் அணி ஒருங்கிணைப்பாளர் அஜ்மல், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கேள்விகள் எவ்வாறு அமையும் என்பது குறித்தும், அதை எவ்வாறு அணுகுவது என்பது குறித்தும் உரை நிகழ்த்தினார். இர்பான் அவர்கள் 12ஆம் வகுப்பு பாடங்கள் தொடர்பாக விவரித்தார்.
இதில் ஆசாத் நகர் கிளை மாணவர் அணி செயலாளர் அப்துல் அஜீஸ் தலைமை வகித்தார். இதில் 300கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மாணவர்களுக்கு சாதித்துக் காட்டுவோம்வழிகாட்டி புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. புகழுக்கும் பெருமைக்கும் சொந்தக்காரன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே..
|