TNTJ Student wing

 "தான் நாடியோருக்கு ஞானத்தை(அல்லாஹ்) வழங்குகிறான் ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கபட்டுவிட்டார்." (அல் குர் ஆன் 2:269)


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
இராஜபாளையத்தில் மாமனிதரைத் தேட வைத்த கட்டுரைப் போட்டி...
Click image to enlarge


             விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவரனி சார்பாக கடந்த ஆண்டு பிறமத மக்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தியதையும் அதனைத் தொடர்ந்து இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்தியதையும் உணர்வு வாசகர்கள் நன்கு அறிவார்கள். அந்நிகழ்ச்சியில் ஏராளமான பிறமத அன்பர்கள் கலந்து கொண்டு இஸ்லாத்தைக் குறித்த தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதோடு, இஸ்லாத்தைக் குறித்து தங்களுக்கு ஏற்பட்ட ஐயங்களை கேட்டு தெளிவு பெற்றனர். நிகழ்ச்சியில் பிறமத அன்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு நம்முடைய மாநிலப் பொதுச் செயலாளர் சகோ: கோவை. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் சொன்ன விளக்கம் மிகவும் அருமையாக இருந்ததை இன்றும் பல பிறமத சகோதரர்கள்  மகிழ்ச்சியோடு தெரிவிக்கின்றனர்.

 


   கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பிறமத அன்பர்களுக்கு இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யும் விதமாக ஒரு கட்டுரைப் போட்டி நடத்திட இராஜபாளையம் கிளை சகோதரர்கள் முடிவு செய்தனர். அதனடிப்படையில் கிளை நிர்வாகிகள் ஆலோசனை செய்யும் போது கட்டுரைப் போட்டியின் தலைப்பாக மாமனிதர் நபிகள் நாயகம் என்னும் தலைப்பைத் தேர்வு செய்யலாம் என்று அனைவரும் ஒருமித்த கருத்தாக கூறினார்கள். ஏனெனில், கடந்த சில மாதங்களுக்கு முன்னால் நம் உயிரினும் மேலான நபி (ஸல்) அவர்களை தவறாக சித்தரித்து திரைபடம் எடுத்த குறுமதியாளார்களின் குறுக்குப் புத்திக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக நம்முடைய மாநிலத் தலைமை கடந்த நவம்பர் மாதத்தில் அனைத்து கிளைகளிலும் மாமனிதர் நபிகள் நாயகம் அவர்களுடைய சிறப்புகள் பற்றி பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என சுற்றரிக்கை அனுப்பியிருந்தது.

 

   ஏற்கனவே நபி (ஸல்) அவர்களை கேலி செய்த எதிரிகளின் சூழ்ச்சிகளைக் கண்டு கொதித்து போயிருந்த நம் கிளை சகோதரர்கள், தலைமையின் இந்த சுற்றக்கையைக் கண்டதும் பெரு மகிழ்ச்சியடைந்து கட்டுரைப் போட்டியின் தலைப்பாக மாமனிதர் நபிகள் நாயகம் என்னும் தலைப்பைத் தெர்வு செய்ததோடு மட்டுமில்லாமல் மாமனிதரின் அப்பழுக்கற்ற வாழ்க்கையை பொதுமக்கள் முன்னிலையில் கொண்டு செல்ல களமிறங்கினார்கள்.

 

   சகோதரர் பீ.ஜே அவர்கள்  எழுதிய மாமனிதர் நபிகள் நாயகம் நூல் 150 புஸ்தகங்களும் அது போக கிளை சார்பாக 1000 மாமனிதர் சிறிய நூல்களும் (மாமனிதர் நூலில் இருந்து சுருக்கி எடுத்த
 
குறிப்புகள்) இராஜபாளையம் முழுவதும் விநியோகிக்க ஆரம்பித்தார்கள் . இது போக எட்டு இடங்களில் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டது. 3000 துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப் பட்டது. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நிர்வாகத்தினர் அனுமதி பெற்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைத்து தரப்பிலும் மாமனிதர் பற்றிய பிரச்சாரங்கள் கொண்டு செல்லப் பட்டது. இராஜபாளையத்தில் மட்டுமில்லாமல் இராஜபாளையத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்திற்கும் நமது பிரச்சார குழு சென்று மாமனிதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பற்றி பிரச்சாரங்கள் மேற்கொண்டனர். அரசு மருத்துவமனைகள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் என அனைத்து இடங்களிலும் நமது பிரச்சாரங்கள் தொடர்ந்தது.

 

     அல்லாஹ்வுடைய மாபெரும் கருணையினால் நமது பிரச்சாரங்களின் பலனால் கிட்டத்தட்ட 200 க்கும் மேற்பட்ட சகோதரர்கள்  நம்மை தொடர்பு கொண்டு கட்டுரை போட்டியில் கலந்து கொள்ள பெயரைப் பதிவு செய்துள்ளனர். இராஜபாளையத்தில்  தற்போது எந்த இண்டெர்நெட் மையத்திற்கு சென்றாலும் மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) பற்றிய விபரங்களைத் தேடும் இளைஞர் கூட்டம் அலைமோதுகிறது (அல்ஹம்துலில்லாஹ்).

  இஸ்லாத்தை அறிந்து கொள்வதில் பிறமத மக்கள் கொள்ளும் ஆர்வத்தைக் கண்ட நம்மவர்களும்  நமது கிளை சகோதரர்களைத் தொடர்பு கொண்டு முஸ்லிம்களுக்கும் கட்டுரைப் போட்டி நடத்துங்கள் என்று கேட்க ஆரம்பித்ததினால் கிளை நிர்வாகிகள் ஆலோசித்து நம் சகோதர, சகோதரிகளுக்கும் மாமனிதர் நபிகள் நாயகம் என்னும் தலைப்பையே தேர்வு செய்து கட்டுரை போட்டி நடத்த முடிவெடுக்கப்பட்டது. பின்னர் மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி நமது தெருக்கள் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

 

 

வந்த கட்டுரைகளும் நாம் பெற்ற படிப்பிணைகளும் :

 

       டிசம்பர் மாதம் 15 ம் தேதிக்குள் கட்டுரையை அனுப்ப வேண்டும் என்ற நமது விதிமுறையை ஏற்ற மக்களில் பலர் தங்களது கட்டுரைகளை  நமக்கு அனுப்பினர். சுப்ஹானல்லாஹ்! வந்த அத்துணைக் கட்டுரைகளையும் படித்துப் பார்த்த நமது நடுவர் குழு ஆச்சரியத்தில் மூழ்கினர். அந்த அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும் அறிந்து கொள்வதில் பிற மத மக்கள் அலாதி ஆர்வமுள்ளவர்களாக இருப்பது தெரிய வந்தது. ஆனால், நாம்தான் இவ்வளவு காலம் இந்த மக்களிடம் இஸ்லாத்தைச் சொல்லாமல் அலட்சியமாக இருந்துவிட்டோம் என்று எண்ண தோன்றியது. இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களிலாவது இஸ்லாத்தின் தூதுச்செய்தியை மக்கள் மன்றத்தில் எடுத்துச் செல்வோம். இது விஷயத்தில் அலட்சியம் தவிர்ப்போம்.
 


TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in