TNTJ Student wing

 "அவர் தம் வாலிபத்தை அடைந்ததும், அவருக்கு நாம் ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம். இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் நற்கூலி வழங்குகிறோம்."(அல் குர் ஆன் 12:22)


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
விண்வெளி திருவிழா 2013 (Aerospace festival 2013) ...
Click image to enlarge

விண்கலங்கள் மற்றும் வானூர்தி பற்றிய அறிவை வளர்க்கும் வகையில் வின்வெளி திருவிழா 2013யை  (Aerospace festival 2013) பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. PMU(Periyar PURA (Providing Urban Amenities in Rural Areas)) (கிராமப்புறங்களில் நகர்ப்புற வசதிகள் வழங்குதல்) என்ற திட்டத்தின் கீழ் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செயப்பட்டுள்ளது. நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியை கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் அறிந்து கொள்ளவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

இந்நிகழ்ச்சியில் நம் நாட்டின் முன்னனி நிறுவனங்களின் முதன்மையான கண்டுபிடிப்புகளான BrahMos, ISRO, DRDO, NAL, HAL, TNSCST, ADA, ADE and IISCவை இடம் பெற உள்ளன. மேலும் தற்போதைய மற்றும் எதிர்கால ஆராய்சிகள் பற்றிய தகவல்களும் உள்ளன.

விஞ்ஞானி APJ.அப்துல் கலாம், இஸ்ரோ முதன்மை இயக்குநர் மயில்சாமி அண்ணா துரை மேலும் இது போன்ற பல விஞ்ஞானிகள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.

வானூர்தி மற்றும் விண்வெளி (Aeronautical and Aerospace Engineering) பற்றிய அறிவை வளர்ப்பதும், நிகழ்கால மற்றும் எதிர்கால கண்டுபிடிப்புகளை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் எனபதே இந்நிகழ்சியின் முக்கிய நோக்கமாகும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வானூர்தி மற்றும் விண்வெளி பொறியலின் முக்கியதுவம் மற்றும் பயன்பாடுகளை அறிந்து கொள்வதற்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும்.

ஜனவரி 21 – 2013முதல்  ஜனவரி232013மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ஜனவரி 17– 2013க்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு கட்டணம் உண்டு.

மேலும் தகவல்களுக்கு கீழ் கண்ட இணையதளத்தை பார்வை இடவும்

http://www.pmu.edu/aerofest/.


TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in