"அவர் தம் வாலிபத்தை அடைந்ததும், அவருக்கு நாம் ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம். இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் நற்கூலி வழங்குகிறோம்."(அல் குர் ஆன் 12:22)


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
நுழைவு தேர்வுகள்
சிஎஸ்ஐஆர் நெட் தகுதி தேர்வு அறிவிப்பு

ஒவ்வொரு வருடமும் அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடபிரிவுகளுக்காக நெட் தகுதி தேர்வை அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) ஆண்டுக்கு இரண்டு தடவை (ஜுன், டிசம்பர்) நடத்துகிறது. டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள தகுதி தேர்வை ஜுலை 22-ந் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று சிஎஸ்ஐஆர் அறிவித்துள்ளது. ஜுன் மாத தேர்வு முடிந்த நிலையில் ,டிசம்பர் மாத தேர்வை அறிவித்துள்ளது. இத்தேர்வு டிசம்பர் மாத இறுதிக்குள் நடைபெறும்.

புதிய தலைமுறையின் கல்வி உதவி‏ ..

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று பொருளாதார காரணங்களால் படிப்பை தொடர முடியாத ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில் புதியதலைமுறை இதழ் குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இலவச கல்வி எனும் உதவி திட்டத்தை வெளியிட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பை உங்கள் பார்வைக்கு தருகிறோம். விரும்பும் தகுதியுடைய மாணவர்கள் நீங்கள் சேரப்போகும் கல்வி நிறுவனங்கள் குறித்தும் இந்த உதவி திட்டம் குறித்தும் முழுமையாக விசாரித்து கொண்டு பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். இன்னும் பொருளாதாரத்தில் பின்தங்கிய, தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு புதிய தலைமுறை வழங்கும் இலவச உயர் கல்வித் திட்டம்...

எல்சாட் (LSAT) நுழைவுத்தேர்வு....

சட்டக் கல்லூரிகளில் இடம் பெறுவதற்கான எல்சாட் (LSAT) நுழைவுத்தேர்வு, வரும் மே 18ம் தேதி, இந்தியாவின் 16 நகரங்களில் நடைபெறவுள்ளது. இத்தேர்வின் மதிப்பெண்களை, தற்போது 50க்கும் மேற்பட்ட முக்கிய கல்லூரிகளும் சட்டக் கல்வி நிறுவனங்களுங் மாணவர் சேர்க்கைக்கு பயன்படுத்திக் கொள்கின்றன. எல்சாட் எனப்படும் லாபநோக்கற்ற உலகளாவிய சட்டப் பள்ளி சேர்க்கை கவுன்சிலால் இத்தேர்வு உருவாக்கப்பட்டுள்ளது...

சட்டம் படிக்க நுழைவு தேர்வு ......

சட்டக் கல்லூரிகளில் சட்டப் படிப்பு பயில விரும்புவோருர் LSAT என்ற நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இன்டிகிரேடட் எல்.எல்.பி, 3 வருட எல்எல்பி, 2 வருட எல்எல்எம் உள்ளிட்ட பல்வேறு சட்டப் படிப்புகளில் சேர LSAT நுழைவுத்தேர்வின் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படுகிறது....

குரூப்-2 தேர்வு: விண்ணப்பிக்க வேண்டிய நேரம்‏

குரூப் 2 பிரிவில் காலியாகவுள்ள ஆயிரத்து 64 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தத் தேர்வுக்கு செப். 5 முதல் விண்ணப்பிக்கலாம். வணிகவரித் துறை துணை அலுவலர், சார் பதிவாளர், தொழிலாளர் நலத் துறை உதவி ஆய்வாளர், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட 19 பதவிகளில் காலியாகவுள்ள ஆயிரத்து 64 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது....

CAT - 2013 நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்.,26 கடைசி‏ ......

மத்திய அரசின் மேலாண்மையியல் உயர்கல்வி நிறுவனங்களான ஐஐஎம்-களில் வணிக மேலாண்மை தொடர்பான படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஐஐஎம்.,ஆல் நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வு CAT தேர்வில் பங்கேற்கலாம். கல்வித்தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானதாகும்.

Pages:(8)  [1] 2  3  4   Next|Last
நிகழ்ச்சிகள்
TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in