“என் அருமைத் தந்தையே! மெய்யாகவே உங்களிடம் வந்திராத கல்வி ஞானம் நிச்சயமாக எனக்கு வந்திருக்கிறது; ஆகவே, நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களைச் செவ்வையான நேர்வழியில் நடத்துகிறேன்."(அல் குர் ஆன் 19:43)


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
தொழில்நுட்பம்
ஐஐடி தேர்வுக்கான இலவசப் பயிற்சி‏...

சென்னை மாநகராட்சிப் பள்ளி களில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஐஐடி தேர்வுக்கான இலவசப் பயிற்சி அளிக்க மாநக ராட்சி திட்டமிட்டுள்ளது. தனியார் பயிற்சி மையங்கள் ஐஐடி தேர்வுக்கான பயிற்சிகளுக்கு அதிகக் கட்டணம் வசூலிப்பதால் இந்தத் திட்டம் மாணவர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றி பள்ளித் தலைமையாசிரியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தனை மாணவர்கள் சேர விரும்புகிறார்கள் என்று தலைமையாசிரியர்கள் தெரிவித்த பிறகு பயிற்சிகள் பற்றி முடிவெடுக்கப்படும்.....

பகுதி நேர பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்

அண்ணா பல்கலைகழகத்தில் பகுதிநேர  பொறியியல் படிப்புகளில் சேருவதற்குத் திங்கள்கிழமை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாகக் கிண்டி பொறியியல் கல்லூரி

மின் நிலையங்களில் பணிபுரிய என்ஜினீயரிங் மாணவர்களுக்கு சிறப்புப் படிப்பு!‏

பொறியியல் படிப்புகளைப் படிக்கும் மாணவர்கள், சிறப்புப் பயிற்சிகளைப் பெறுவதன் மூலம் தங்களது வேலைவாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முடியும். அதற்கேற்ற வகையில், மின் உற்பத்தி நிலையங்களில் பணி செய்ய விரும்பும் பொறியியல் பட்டதாரி மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கிறது மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் நேஷனல் பவர் டிரெயினிங் இன்ஸ்டிட்யூட். அதன் தலைமை மையம் ஃபரிதாபாத்தில் உள்ளது. இதன் தென்மண்டலப் பயிற்சி மையம் தமிழகத்தில் உள்ள நெய்வேலியில் உள்ளது. நமது நாட்டில் 100 மெகாவாட் திறன் அல்லது அதற்கு.....

இலவசப் பொறியியல் கல்வி, வேலை வாய்ப்பு வழங்கும் ரயில்வே துறை...

இலவசமாக பொறியியல் படிப்பு படிக்க வைத்து, மாதம்தோறும் உதவித் தொகையும் வழங்கி, எல்லாவற்றுக்கும் மேலாக படித்து முடித்தவுடன் வேலையையும் வழங்குகிறது ரயில்வே துறை.

எல்லோருக்கும் கனவு :

"ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம் போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் பொறியியல் பட்டப் படிப்பை முடித்து உடனடியாக கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலை பெற வேண்டும்" பிளஸ் டூ படிக்கும் பெரும்பாலான மாணவ-மாணவிகளின் கனவு இதுதான்....

வாகன ஒட்டுநர் பயிற்சி‏ .........

சிறந்த ஓட்டுநர்களை உருவாக்குவதற்காக  பயிற்சி அளிக்கிறது சாலைப் போக்குவரத்து நிறுவனம். இந்தப் பயிற்சியில் சேர ஆண், பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சி சென்னையிலும், திருச்சியிலும் நான்கு வார காலத்திற்கு நடைபெறுகிறது. கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி 12 வார காலத்திற்கு தமிழ்நாட்டில் சாலைப் போக்குவரத்தின் நிறுவனத்தின் பயிற்சி மையங்கள் அமைந்துள்ள கும்மிடிப்பூண்டி, விழுப்புரம், வேலூர், திருச்சி, கும்பகோணம், காரைக்குடி, புதுக்கோட்டை, ஈரோடு.......

வாரத்துக்கு 5 பாடவேளைகளில் கம்ப்யூட்டர் பாடம் ...

நடுநிலைப் பள்ளிகளில் வாரத்துக்கு குறைந்தபட்சம் 5 பாடவேளைகளில் கம்ப்யூட்டர், லேப்-டாப்களை பயன்படுத்தி பாடம் நடத்த வேண்டும் என்று தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. உணவு இடைவேளைக்கு முன்னரோ அல்லது பின்னரோ உள்ள பாடவேளையை கணினி வழியிலான பாடத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு பாட ஆசிரியரும் குறைந்தபட்சம் ஒரு பாடவேளையாவது கம்ப்யூட்டரைப் பயன்படுத்த வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்....

Pages:(7)  [1] 2  3  4   Next|Last
நிகழ்ச்சிகள்
TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in