|
|
| பி.இ., பி.டெக். நேரடி இரண்டாமாண்டு சேர்க்கை: மே 21 முதல் விண்ணப்பம் விநியோகம் |
பி.இ, பி.டெக். படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேருவதற்கான விண்ணப்பங்கள் மே 21 முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளன.பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ முடித்த மாணவர்கள் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேரலாம்.வார வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
|
 |
|
|
|
| பொறியியல் - தெரிந்து கொள்ள வேண்டியவை.... |
+2  தேர்வு முடிவுகள் வெளிவந்து விட்டதால் அடுத்தக்கட்டத்திற்கு மாணவர்கள் தங்களை தற்போது தயார்படுத்திக் கொண்டிருப்பார்கள். எந்த பாடப்பிரிவை தேர்வு செய்யலாம்? எந்தக் கல்லூரியை தேர்வு செய்யலாம்? எந்தக் கல்லூரியை தேர்வு செய்தால் வேலைவாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்? உள்ளிட்ட எண்ணற்ற சந்தேகங்கள் மாணவர்கள் மனதில் எழாமல் இல்லை...
|
 |
|
|
|
| பிளஸ் டூவுக்குப் பின்... பைலட் ஆகலாம்! |
விமானியாகி விண்ணில் பறக்க வேண்டும் என்பது பல இந்திய இளைஞர்களின் கனவு. தரையில் வேலை பார்த்தால் கிடைக்கும் வருமானத்தைவிட பறந்து கொண்டே பார்க்கும் வேலையில் அதிக வருமானம் கிடைக்கும் என்பதால், பைலட்டுகளாக விரும்புவோர் பலர். விமானங்களில் பைலட் ஆக பணிபுரிவதற்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பயிற்சி அளித்து வருகின்றன. சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய வளாகத்தில் இயங்கி வரும் தி மெட்ராஸ் ஃபிளையிங் கிளப், அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி நிறுவனமாகும். 1930-இல் பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
|
 |
|
|
|
| பிளாஸ்டிக் தொழில்நுட்ப டிப்ளமோ படிப்புகள்.... |
நாட்டில் பிளாஸ்டிக் தொழில் சம்பந்தமான தொழில்நுட்பங்களைக் கற்றுத் தருவதற்கான முன்னோடிக் கல்வி நிறுவனம் சிபெட் என்று அழைக்கப்படும் சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிளாஸ்டிக் என்ஜினீயரிங் டெக்னாலஜி. மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சகத்தால் 1968-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது இந்தக் கல்வி நிறுவனம். அகமதாபாத், அமிர்தசரஸ், ஔரங்காபாத், போபால், புவனேஸ்வரம், சென்னை, குவாஹாத்தி, ஹாஜிப்பூர், ஹால்டா, ஹைதராபாத், ஜெய்ப்பூர், இம்பால், லக்னோ, மைசூர், பானிபட் ஆகிய இடங்களில் சிபெட் மையங்கள் இருக்கின்றன.
|
 |
|
|
|
| விண்வெளி தொழில்நுட்பப் படிப்புகளை இலவசமாகப் படிக்கலாம்! |
விண்வெளித் துறையில் ஆர்வமிக்க திறமையான மாணவர்களுக்கு ஏற்ற கல்வி நிறுவனம் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்பேஸ் சயின்ஸ் டெக்னாலஜி, விண்வெளி ஆய்வுத் துறையில் உலக நாடுகளை வியக்க வைக்கும் வகையில் இந்தியா முன்னேறி வருகிறது. விண்வெளி ஆய்வுக்குத் தொடர்புடைய அறிவியல் தொழில்நுட்பப் படிப்புகளில் இளைஞர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக திருவனந்தபுரம் அருகே வாலியமலையில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்பேஸ் சயின்ஸ் டெக்னாலஜி (ஐஐஎஸ்டி) செயல்பட்டு வருகிறது.
|
 |
|
|
|
| இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்காக மே 4ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விற்பனை |
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்காக மே 4ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விற்பனை!
பொறியியல் சேர்க்கை தொடர்பான முழு அட்டவணையை, பொறியியல் சேர்க்கை செயலர், ரெய்மண்ட் உதிரியராஜ், நேற்றிரவு வெளியிட்டார். அதன் விவரம்:
* விண்ணப்பம் வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியீடு 3.5.13
* விண்ணப்பம் வினியோகம் ஆரம்பம் 4.5.13
 
|
 |
|
|
|
|
|