“என் அருமைத் தந்தையே! மெய்யாகவே உங்களிடம் வந்திராத கல்வி ஞானம் நிச்சயமாக எனக்கு வந்திருக்கிறது; ஆகவே, நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களைச் செவ்வையான நேர்வழியில் நடத்துகிறேன்."(அல் குர் ஆன் 19:43)


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
மருத்துவம்
செப்டம்பர் 30ம் தேதி எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ். காலி இடங்களுக்கான கலந்தாய்வு

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 30ம் தேதி நடக்கிறது.

MBBS க்கு மாற்றான மருத்துவ படிப்புகள்...

உலக அளவில் அலோபதி பிரபலம் ஆவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே ஏராளமான மருத்துவ முறைகள் உலகில் இருந்து வந்தன. இந்தியாவிலும் சித்தா, ஆயுர்வேதா, யூனானி, போன்ற மருத்துவ முறைகள் நடைமுறையில் இருந்தது இன்றளவும் இருந்தும் வருகின்றன. ஒரு மருத்துவராக மாறி மக்களின் உயிரும் , நலனும் காக்க வேண்டும் எனும் எண்ணம் உள்ள சிலர் MBBS படிப்பை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் அது மட்டும் உலகில் மருத்துவம் இல்லை என்பதை..

கால்நடை மருத்துவ பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள்


கால்நடை மருத்துவ பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் 12-5-2014 முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னை , நாமக்கல் ,ஒரத்தநாடு, நெல்லை மற்றும் ஓசூரில் உள்ள கல்வி மையங்களில் பயில்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. கால்நடை மருத்துவ படிப்புக்கான 280 இடங்களுக்கும் , 20 உணவு பதப்படுத்தல் மற்றும் 20 கோழி உற்பத்தி தொழில் நுட்ப படிப்புக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

மருத்துவப் படிப்பு; மே 14 முதல் விண்ணப்பம் விநியோகம்‏ ....

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 14-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் மே 14-ஆம் தேதி விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். மே 14-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை விநியோகிக்க மருத்துவக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

சித்த மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு‏ .....

சித்த மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்னும் பத்து நாள்களில் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே மாதம் 9-ஆம் தேதி வெளியாகின. சித்தா உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 10-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டன. 3,500 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அரசினர் இந்திய மருத்துவமனை மற்றும் இயக்குநரகத்திற்கு வந்துள்ளன.

இந்திய மருத்துவம் - விண்ணப்பம்‏...

தமிழகத்தில் சித்த மருத்துவம்-ஆயுர்வேத மருத்துவம்-யுனானி மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க விண்ணப்ப விநியோகம் புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 285 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. சென்னை அரும்பாக்கம், பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள், நாகர்கோயிலில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி, மதுரை திருமங்கலத்தில் அரசுோமியோபதி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன......

Pages:(4)  [1] 2  3  4  Next|Last
நிகழ்ச்சிகள்
TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in